வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை

virat about pay rise

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தவுள்ளார்.

2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராயை வெள்ளிக்கிழமை சந்தித்து சம்பள உயர்வு குறித்து வலியுறுத்தவுள்ளார் கேப்டன் விராட் கோலி. முன்னாள் கேப்டன் தோனி அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து கோலி, வினோத் ராயை சந்தித்து வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டி வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

Tagged with:     , , ,