விவேகம் படத்தின் 3வது பாடல் வெளியானது

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘காதலாட’ பாடல் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தின் ‘சர்வைவா’ மற்றும் ‘தலை’ விடுதலை பாடல்களின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது.

விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் அக்ஷரா ஹாசன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.