‘விவேகம்’ படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் படம் ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து 3வது பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அனிருத் இன்று காலை கூறினார். இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி ‘விவேகம்’ படத்தின் அடுத்த பாடல் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தில் உருவான மெலடி பாடல் என்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், சென்சார் பணிகள் முடிந்தபின்னர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.