ஜியோவிற்க்கு போட்டியாக வந்த வோடாபோன்

jio vs vodafone

ஜியோ நிறுவனம் தற்பொழுது பல புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் வோடாபோன் நிறுவனம் ஜியோவிற்க்கு போட்டியாக சலுகைகளை அறிவித்துள்ளது.

ஜியோ வருவதற்கு முன்பு 100mb டேட்டா 25ரூபாய் விற்ப்பனையில் இருந்து வந்தது. மாதம் 1GB டேட்டா 150ரூபாய் வரை விற்று வந்தது. ஆனால் ஜியோ என்ற ஒன்று வந்த பிறகு தினமும் 1GB இலவசமாய் வழங்கியது. ஒரு வருடத்திற்கு பின்னர் 399ரூபாய் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1GB டேட்டா, இலவச கால் மற்றும் மெசேஜ் பெறலாம் என்று அறிவித்தது.

தீபாவளி சலுகையாக ஜியோ கேஷ்பேக் சலுகை ஒன்றினை வழங்கியது அக்டோபர் 18ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 100சதவீதம் கேஷ்பேக் என அறிவித்திருந்தது. அதற்கும் பின்பு விலையில் மாற்றம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. சலுகை முடிந்த பின்பு மூன்று மாதத்திற்கு 459ரூபாய் என்று தெரிவித்துள்ளது.

vodafone company

தற்பொழுது வோடாபோன் ஜியோவிற்க்கு போட்டியாக புதிய சலுகையுடன் வந்துள்ளது. வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக 84நாட்களுக்கு தினமும் 1GB டேட்டா, இலவச கால் மற்றும் மெசேஜ் ஆகியவற்றை 496ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது. வோடாபோனிற்கு MNP மூலமாக மாறும் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

Tagged with:     , ,