தோனியின் ஐ.பி.எல் ஆட்டம் எந்த அணிக்கு தெரியுமா?

csk returns
தோனியை தக்க வைத்து கொள்ளுமா சிஎஸ்கே ?

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் ஆட்டத்தில் களம் இறங்கவுள்ளது. இந்த இரண்டு அணிக்கு தடை விதித்திருந்த கால கட்டத்தில் அந்த அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரைசிங் புனே , குஜராத் லயன்ஸ் என்ற அணிக்காக விளையாடினர்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் அணிகள் உயிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியுமா என்ற விவாதம் நடக்கவுள்ளது. ஒரு அணிக்கு 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அணி உரிமையாளர்களின் கோரிக்கை நியாமாக இருந்தால் 3 வீரர்கள் முதல் 5வீர்கள் வரை தக்கவைத்து கொள்ள கூடும் என தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி அணியில் 2 வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.

Tagged with:     , , ,