யூ டியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் தனது புதிய கட்டண சேவையை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் யூ டியூபில் வீடியோ பகிர்வதற்கு இலவச சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அதன் பார்வையாளர்களிடம் பணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
விரைவில் யூ டியூப் நிறுவனத்தின் பாடல்களுக்கான பிரத்யேக சேவை தொடங்கப்படும் என்றும் அதற்கு மாதம் அல்லது ஆண்டு தோறும் சந்தா செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்க்காக சோனி மியூசிக் என்டர்டெயின்மெண்ட், யுனிவேர்சல் மியூசிக் குரூப், மெர்லின் ஆகிய இசை வெளியீட்டுக்கு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.